search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவஹர்லால் நேரு"

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நேருவின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளம் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    சர்ச்சை கருத்துக்களால் தன்னை பிரபல படுத்த முயலும் ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா, தற்போது மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் உண்ட நேரு பண்டிதரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். #GyanDevAhuja #BJP
    ஜெய்ப்பூர்:

    சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா.

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அஹுஜா, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சியும், பன்றியின் இறைச்சியும் உண்டதால் அவர் பண்டிதர் அல்ல என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்பட்டும், சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறது.

    முன்னதாக, பசு காவலர்கள் என்ற பேரில் நடத்தப்பட்ட கொலை மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவாக, பசுவை கடத்துவதும், கொலை செய்வதற்குமான தண்டனையை அவர்கள் பெற வேண்டும் என கருத்து தெரிவித்தவர் கியான் தேவ் அஹுஜா என்பது குறிப்பிடத்தக்கது. #GyanDevAhuja #BJP
    இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் 54-வது நினைவுதினத்தையொட்டி, டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    புதுடெல்லி:

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிதர் ஜவஹர்லால் நேரு 27.5.1964 அன்று இயற்கை எய்தினார். அவர் மறைந்த 54-வது நினைவுதினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சாந்திவனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அங்கு நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.



    இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் நேருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். #JawaharLalNehru #deathanniversary #leaderspaytribute
    ×